Friday, September 15, 2023

🎵 தொலைக்காட்சித் தொடர்: இரயில் சினேகம், பாடல்: அந்த வீணைக்குத் தெரியாது

பல்லவி:

அந்த வீணைக்குத் தெரியாது,

அதைச் செய்தவன் யாரென்று (2)

அட, இந்தப் பிள்ளையும் அறியாது,

இதைத் தந்தவன் யாரென்று.

வீணைக்குள் இருக்கும் ராகங்கள்,

இந்த பிள்ளைக்குள் இருக்கும் சோகங்கள்

இரண்டையும் நான்தான் வாங்கினேன்,

பின்பு இரவினில் எங்கே தூங்கினேன்.

(அந்த)


சரணம்:

இடுப்பிலமர்ந்த நிலவை, தரையில் 

இறக்கி விடவே மனமில்லை.(2)

வாசல் திறந்து, வந்தது தென்றல்,

வழியனுப்பவே வழியில்லை.(2)


பாசம் நேசம் இரண்டும் சொல்ல

கண்ணீரைப்போல் மொழியில்லை.

ஒதுங்கவந்த மேகம், இங்கே,

பொழிந்துவிட்டால் பிழையில்லை.

(அந்த)


ம்..ம்..ம்...ம்..ம்..ம்..ம்...

சரணம்:

உள்ளமுருகும் பாடல்  பாடி,

உன்னை உறங்க வைத்தேனே.

உனது கண்ணும் உறங்கியதம்மா,

எனது உறக்கம் தொலைத்தேனே.


(பிண்ணனி ஓசை..கடிகாரத்தின் டிக் டிக்...)


உறக்கம் தேடி அலையும் கண்கள்,

உறங்காதிருக்க முடியாது

விழித்துக் கொண்டே உறங்கும் உயிரை,

எழுப்ப எனக்குத் தெரியாது.


அந்த வீணைக்குத் தெரியாது,

அதைச் செய்தவன் யாரென்று.


அட, இந்தப் பிள்ளையும் அறியாது,

இதைத் தந்தவன் யாரென்று.

வீணைக்குள் இருக்கும் ராகங்கள்,

இந்த பிள்ளைக்குள் இருக்கும் சோகங்கள்

இரண்டையும் நான்தான் வாங்கினேன்,

பின்பு இரவினில் எங்கே தூங்கினேன்.


அந்த வீணைக்குத் தெரியாது,

அதைச் செய்தவன் யாரென்று.

*********************************

கலாகேந்திராவின் அலையில் திருமதி சித்ரா அவர்களின் குரல்

*********************************


Thursday, September 14, 2023

🚆தொலைக்காட்சித் தொடர்: இரயில் சினேகம், பாடல்: இரயில் சினேகம்

 இரயில் சினேகம்... இரயில் சினேகம்... (2)

முதலும் இல்லாதது, முடிவும் இல்லாதது

முகமே இல்லாதது, அறிமுகமே இல்லாதது

விதையும் இல்லாமல், நிலமும் இல்லாமல்

மரமாய் உண்டாவது.


இரயில் சினேகம்... இரயில் சினேகம்... (2)

முதலும் இல்லாதது, முடிவும் இல்லாதது

முகமே இல்லாதது, அறிமுகமே இல்லாதது

விதையும் இல்லாமல், நிலமும் இல்லாமல்

மரமாய் உண்டாவது.

இரயில் சினேகம்... இரயில் சினேகம்... (2)

(இசை)


வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்,

வந்த தூரம் கொஞ்ச தூரம்.

சொந்தமில்லை எந்த ஊரும்,

தேவையில்லை ஆரவாரம்.

தோளில் உள்ள பாரம் போதும்,

நெஞ்சில் என்ன  வேறு பாரம்.


நேற்று மீண்டும் வருவதில்லை,

நாளை எங்கே தெரியவில்லை,


இன்று ஒன்று மட்டுமே,

உங்கள் கையில் உள்ளது.


வாழ்க்கை வந்து உங்களை,

வாழ்ந்து பார்க்கச் சொன்னது.

முதலும் இல்லாதது, முடிவும் இல்லாதது

முகமே இல்லாதது, அறிமுகமே இல்லாதது

விதையும் இல்லாமல், நிலமும் இல்லாமல்

மரமாய் உண்டாவது.

இரயில் சினேகம்... இரயில் சினேகம்... (2)

*********************************

திரு யேசுதாஸ் அவர்களின் அலை

*********************************


🎵 தொலைக்காட்சித் தொடர்: இரயில் சினேகம், பாடல்: அந்த வீணைக்குத் தெரியாது

பல்லவி: அந்த வீணைக்குத் தெரியாது, அதைச் செய்தவன் யாரென்று (2) அட, இந்தப் பிள்ளையும் அறியாது, இதைத் தந்தவன் யாரென்று. வீணைக்குள் இருக்கும் ரா...